கோத்தகிரி பகுதியில் தினமும் காலையில் தூய்மை காவலர்கள் வீடுகள், கடைகளில் சேகரமாகும் குப்பைகளை வாங்குகின்றனர். அவற்றை லாரியில் ஏற்றி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்ல ஓரிடத்தில் மூட்டை கட்டி வைக்கின்றனர். அந்த மூட்டைகளை கால்நடைகள் சேதப்படுத்தி குப்பைகளை வெளியே சிதறடித்து போட்டு தின்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.