சென்னை நுங்கம்பாக்கம் வள்ளூவர் கோட்டம் நெடுஞ்சாலையுடன் இணையும் கிழக்கு மாட வீதி சந்திப்பில் மழைநீர் கால்வாய் அமைக்க சாலை தோண்டப்பட்டது. பணி முடிவடைந்தும் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.