சென்னை சர்மா நகர் குடியிருப்பு பகுதியின் தெருக்களில் தினமும் குப்பைகளை அகற்ற தூய்மை பணியாளர்கள் வருகிறார்கள். குப்பைகளை அகற்ற முறையான வாகனங்கள் இல்லை என்று தெரிகிறது. இதனால் கையால் தள்ளும் சிறுசிறு தொட்டிகளை கொண்டு வந்து குப்பை சேகரிக்கும் அவலநிலை அங்கு காணப்படுகிறது. இதில் குறைந்த அளவான குப்பைகளையை அவர்களால் சேகரிக்க முடிகிறது. இதனால் தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடக்கும் அவல நிலையும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் இதனை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.