புகார் எதிரொலி

Update: 2025-09-07 05:57 GMT

சென்னை கொரட்டூர் ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையின் முகப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் அந்த பகுதி மிகவும் சுகாதார சீர்கேடாகி இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் துறைசார்ந்த அதிகாரிகள் அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றிட வழிவகை செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்