விருதுநகர்-பேராலி கிராமம் செல்லும் சாலையில் ஓரங்களில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றத்தால் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.