சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.