குப்பைத் தொட்டி வேண்டும்

Update: 2025-08-24 13:40 GMT

சென்னை கொரட்டூர் ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை பலருக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதன் முகப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை சேகரிக்க அந்தபகுதியில் குப்பை தொட்டி இல்லாததால் குப்பைகள் ஆங்காங்கே வீசப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள மாடுகள் அதனை உண்பதால் அவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு குப்பை தொட்டி அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்