சாலையோரத்தில் குப்பைகள்

Update: 2025-08-24 12:37 GMT

சூலூர் அருகே இருகூர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் மூட்டை, மூட்டையாக குப்பைகளை கட்டிக்கொண்டு வந்து வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியே குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த குப்பைகள் தெருநாய்களால் சாலையிலும் சிதறடிக்கப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்