பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அண்ணா நகர் தெற்கு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் சாலையோரம் குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி கீழே கிடக்கின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி குப்பைத் தொட்டியை வேறு இடத்தில் மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினதந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து செங்குணம் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து தந்தன. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.