சுகாதார சீர்கேடு

Update: 2025-08-24 10:59 GMT

கரூர் மாவட்டம் வெங்கமேடு வாங்கப்பாளையம் ஓட்டப்பிள்ளையார் கோவிலில் இருந்து பைபாஸ் செல்லும் வழி மற்றும் தனியார் பள்ளி நுழைவு வாயில் அருகே அப்பகுதியை சேர்ந்த இறைச்சி கடைக்காரர்கள் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்