பழனி அருகே சிவகிரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முறையாக குப்பைகள் அள்ளப்படாததால் ஆங்காங்கே சாலை விவரங்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமித்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.