சென்னை அண்ணாநகர் கிழக்கு, 5-வது அவென்யூ பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பிரதான சாலையில் உள்ள மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அதன் கழிவுகளை அதே சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக போட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த கழிவுகள் சாலையை ஆக்கிரமித்து, அந்த பகுதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியக நடவடிக்கை எடுக்க வேண்டும்.