குவிந்து கிடக்கும் குப்ைபகள்

Update: 2025-08-17 10:17 GMT

கோவையை அடுத்த வெள்ளக்கிணறு சவுடாம்பிகா நகர் பகுதியில் சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவை சாலையிலும் சிதறி காணப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. அத்துடன் அங்கு வசித்து வரும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அங்கு குவிந்து கிடக்கும் குப்ைபகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்