குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2025-08-10 11:53 GMT

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள சஞ்சீவிராயன் கோவில் அருகே சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மழை பெய்யும்போது குப்பைகளில் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்