ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றின் கரையோரங்களில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நீர்நிலை மாசடையும் அபாயம் உள்ளது. எனவே ஆற்றின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.