மதுரை ஒத்தகடையில் போக்குவரத்து அதிகம் காணப்படும் திருமோகூர் பகுதியில் உள்ள சாலையின் ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்து செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதுடன் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் குப்பைகளை எரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், குப்பைகள் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.