கரூர் மாவட்டம் ஆத்தூர் பிரிவு சுந்தர்நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தெருமுனையில் கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள் அகற்றப்படாமல் மாதக்கணக்கில் சேர்ந்து வருகிறது. தற்போது ஆடி மாத காற்று பலமாக வீசுவதால் குப்பைகள் பறந்து இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.