நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2025-07-27 12:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, வடகாட்டில் அம்மன்குளம் பகுதியில் திறந்த வெளியில் குப்பைகள் மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குப்பைகள் மற்றும் கோழிக்கழிவுகளை அகற்றி, அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்