திருநயினார்குறிச்சி ஏலா முதல் கடியப்பட்டணம் கடலில் கலக்கும் இந்த வள்ளியாற்றில் பிளாஸ்டிக், குப்பைகள் மற்றும் செடி கொடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வள்ளியாற்று தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, வள்ளியாற்று தண்ணீரில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.