ஆத்தூர் தாலுகா வீரக்கல் பகுதியில் உள்ள குடகனாற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் தண்ணீர் மாசடைவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் அந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் இருக்கிறது. எனவே குடகனாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.