குப்பை கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2025-07-20 17:02 GMT

ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் ஆரூர்பட்டி ஏரி உள்ளது. இங்கு உள்ள பஸ் நிறுத்தம் முக்கிய பகுதியாகும். இந்த ஏரியின் மெயின் ரோட்டில் இருபுறமும் ஏராளமான குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு மூச்சி திணறல் ஏற்படும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது. எனவே தேங்கி கிடைக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சசி, தாரமங்கலம்.

மேலும் செய்திகள்