ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் நாமக்கல் செல்லும் சர்வீஸ் ரோட்டில் குப்பைகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. அருகில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆண்டகளூர் கேட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மளிகைக்கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றின் குப்பைகளையும் சர்வீஸ் ரோட்டில் கொட்டுகின்றனர். இந்த குப்பைகளை நாய்கள் கிளறிவிட்டு சாலையில் ஓடும்போது இரு சக்கர வாகனங்களில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே குப்பைகளை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும்.
-கண்ணன், ஆண்டகளூர்கேட்.