புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாட்டில் அம்மன் குளம் பகுதியில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.