பெரம்பலூர் வட்டம் செங்குணம் அண்ணா நகரில் இருந்து அருமடல் செல்லும் சாலையில் சரியான பராமரிப்பு இல்லாததால் குப்பை தொட்டி கவிழ்ந்து கிடக்கிறது. இதனால் குப்பைகள் சாலை ஓரமும், வடிகால் வாய்க்கலிலும் தெரு நாய்கள் கிளறி விடுவதால் குப்பைகள் அங்கும் இங்குமாக பரவி கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடும், நோய்கள் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.