குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2025-07-20 08:20 GMT

சென்னையில் உள்ள பஸ் நிலையங்களில் பரபரப்பான ஒன்று பிராட்வே. இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில், பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்படுள்ள சிறு,குறு கடைகளால் பஸ் நிலையம் முழுவதும் குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது.மேலும், இந்த குப்பைகள் பல மாதங்களாக அகற்றப்படாமலும் உள்ளது. இதனால் ஏற்படும் பயங்கர துர்நாற்றம் பயணிகளை முகசுழிப்பு அடைய வைப்பதோடு தொற்றுநோய் ஏற்படுகிற அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்