பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பழனி-பொள்ளாச்சி சாலையோரத்தில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். அதிலிருந்து வெளியேறும் நச்சு காற்றில் பரவி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதோடு காற்றும் மாசடைகிறது. எனவே குப்பைகள் எரிப்பதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.