சென்னை ராயப்பேட்டை- மயிலாப்பூர் சாலையில் உள்ள ராயப்பேட்டை ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை அரங்க கட்டிடத்தின் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு காரணமாக குப்பை தொட்டிகள் நிரம்பி வழியும் அவலம் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், இந்த அவலநிலையை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்யவேண்டும்.