விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் புறவழிச்சாலையோரம் ஆங்காங்கே குப்பை கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் முகம் சுழித்தபடி செல்வதை காண முடிகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் குப்பைக்கழிவுகளை அகற்றிட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.