மதுரை கோமதி அம்மன் நகர் 2-வது தெருவில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சில நேரங்களில் இந்த பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி மக்களின் நலன் கருதி அப்பகுதியில் கிடக்கும் குப்பைகள் மற்றும் முட்புதர்களை முறையாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.