சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புறவழிச்சாலை ஓரங்களில் இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இந்த கழிவுகளை தெரு நாய்கள் தாறுமாறாக இழுத்து தின்கின்றன. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைகின்றனர். எனவே இப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.