கணபதிபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பின்புறம் உள்ள சாலையில் குப்பைகள் அதிகமாக தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகளால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாவதுடன், விஷப்பூச்சிகள் வசிப்பிடமாகவும் மாறி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.