சுகாதார சீர்கேடு

Update: 2025-06-29 12:34 GMT

திருவள்ளூர் மாவட்டம், பெரிய கோலடி சாலையிலிருந்து அம்பத்தூர் செல்லும் சந்திப்பு சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையின் இரு பக்கங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் குப்பைகளையும், வீட்டு கழிவுகளையும் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலை அருகில் உள்ள குப்பைகளை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்