தேனி அல்லிநகரம் சின்னக்குளம் கண்மாயில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் கண்மாய் பகுதி குப்பைக் கிடங்கு போல் மாறி வருகிறது. அத்துடன் நீர்நிலை மாசுபடுவதோடு, மாசு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு குப்பை கொட்டுவதை தடுக்கவும், குவிந்து கிடக்கும் குப்பையை முழுமையாக அகற்றவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.