நீர்நிலையில் குப்பைகள்

Update: 2025-05-25 14:03 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு கிராமம் பட்டூரில் இருந்து கோவூருக்கு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள நீர்நிலை அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும், குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, நீர்நிலைகளும் பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூக்கை மூடி கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்