சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதியில் சிலர் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.