கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதில் நாய்கள், மாடுகள் குப்பையை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.