நாமகிரிப்பேட்டை நாரைக்கிணறு கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகளில் இறந்துபோன கோழிகளை திறந்த வெளியில் சிலர் வீசி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் கோழிப்பண்ணை கழிவுகள், இறந்த கோழிகளை இந்த பகுதியில் வீசி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, சேந்தமங்கலம்.