சுகாதார சீர்கேடு

Update: 2025-05-04 17:24 GMT

மல்லசமுத்திரம் காளிப்பட்டி 2-வது வார்டில் கந்தசாமி கோவில் அருகில் குடியிருப்புகள், திருமணமண்டபம் சூழ்ந்த பகுதியில் பல வாரங்களாக அதிகளவில் குப்பைகள் தேக்கமடைந்து காணப்படுகிறது. காற்றின் காரணமாக குப்பைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து குடியிருப்பை நாசம் செய்து விடுகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக காளிப்பட்டி கந்தசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழித்து செல்லும் அவலநிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் தேக்கமடைந்துள்ள குப்பைகளை அகற்றவும், வேறு இடத்தில் குப்பைகளை கொட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், மல்லசமுத்திரம்.

மேலும் செய்திகள்