விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே காரங்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கண்மாயில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு தீவைத்து எரிக்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கண்மாயில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.