சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி புறவழிச்சாலையில் சிலர் குப்பைகள் கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி சுகாதார சீர்கேட்டுடன் காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவது, தீயிட்டு எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.