வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை பெரிய சண்முகம் தெருவில் பழமைவாய்ந்த கிணறு பல ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது. முன்பு இங்கிருந்துதான் பொதுமக்கள் குடிநீர் எடுத்து செல்வார்கள். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் புனிதநீர் எடுத்து செல்வார்கள். தற்போது கிணறு பயன்பாடின்றி குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது. எனவே கிணற்றை தூர்வாரி கம்பிவேலி அமைக்கவும், மின்மோட்டாருடன் சின்டெக்ஸ் தொட்டி வைத்து குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.