நோய் பரவும் அபாயம்

Update: 2025-04-20 09:38 GMT
கரூர் வெண்ணெய்மலை காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளன. இங்குள்ள வீடுகள் முன்பு கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக கழிவுநீர் சென்று வருகிறது. இதில் சிலர் தங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீர் விரைவாக செல்வதற்காக ஆங்காங்கே சாக்கடை கால்வாய்களை வெட்டி விட்டு வருகின்றனர். இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு இடங்களில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்