குப்பை தொட்டி அமைக்கலாமே!

Update: 2025-04-06 16:51 GMT

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குப்பைகளை அங்கே வீசி விட்டு செல்கின்றன. இதனால் தேங்கும் குப்பைகளை கோவில் அருகேயே தீ வைத்து எரிக்கும் சூழல் உருவாகிறது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். மேலும் காற்று, நிலம் மாசுபடுகிறது. எனவே பக்தர்கள் குப்பைகளை போடாத வகையில் கோவில் வளாகத்தின் வெளியே குப்பை தொட்டி, விழிப்புணர்வு பலகை அமைத்து தர வேண்டும்.

-சண்முகம், கொல்லிமலை.

மேலும் செய்திகள்