கடலில் வீசப்படும் துணிகளால் ஆபத்து

Update: 2025-04-06 13:06 GMT

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடும்போது பழைய துணிகளை கடலிேல வீசிச் செல்கின்றனர். இந்த துணிகள் சக பக்தர்களின் கால்களில் சிக்குவதால் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். சுற்றுச்சூழலும் மாசடைகிறது. கடலில் பழைய துணிகளை பக்தர்கள் வீசாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை முறையாக அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்