பொதுமக்கள் அச்சம்

Update: 2025-04-06 08:58 GMT

பார்வதிபுரம் கால்வாய்கரையில் இருந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இரவு நேரத்தில் சிலர் வாகனங்களில் வந்து அந்த பகுதியில் மது குடித்து விட்டு பாட்டிகளை வீசி விட்டு செல்கின்றனர். மேலும், சாலையில் வாகனங்களிலும், நடந்து செல்வோரிடம் மதுபோதையில் தகராறு செய்து வருகின்றனர். இதனால், இரவு நேரத்தில் பொதுமக்கள் அந்த வழியாக ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவு நேரத்தில் அந்த பகுதியில் மது குடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருள், நாகர்கோவில்

மேலும் செய்திகள்