குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2025-03-30 10:33 GMT

தஞ்சை மாநகராட்சி காவேரி நகர் 4-ம் தெரு(கிழக்கு) பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குப்பைகளில் இரைதேடி கால்நடைகள், நாய்கள் அதிகளவில் அந்த பகுதிக்கு வருகின்றன. குப்பைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்