கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகபுரம் அருகில் டாக்கர் குளம் உள்ளது. இந்த குளத்தின் வடக்கு கரையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பை அகற்றப்படாததால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குப்பைகள் காற்றில் பறந்து குளத்திற்குள் விழுவதால் தண்ணீரும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், மேலும் குப்பைகள் கொட்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.