அரியலூர்-செந்துறை சாலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த குடியிருப்பு வளாகத்திற்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியில் சாலையோரம் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த குப்பைகளால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள தெருநாய்கள் மற்றும் கால்நடைகள் இந்த குப்பைகளில் சுற்றி வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
