கம்பம் உழவர் சந்தை அருகே காய்கறி கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. அவற்றை அள்ளிச்செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் முகம் சுழித்தபடியே செல்லும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும்.