தீ வைக்கப்படும் குப்பை கழிவுகள்

Update: 2025-03-02 17:53 GMT
கொடைரோடு அருகே உள்ள குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள சாண்டலார்புரம், பொட்டிசெட்டிபட்டி, சவுந்திராபுரம், கந்தப்பகோட்டை, குல்லலக்குண்டு ஆகிய ஊர்களில் உள்ள சாலை ஓரம், குடியிருப்பு பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி தீ வைத்து விடுகின்றனர். இதனால் மக்களுக்கு எளிதில் நோய்கள் பரவக்கூடிய அவல நிலையில் உள்ளனர். குப்பைகளில் தீ வைப்பதால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீ வைப்பதால் மக்களுக்கு நோய்கள் பரவுதற்கு முன் உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்